அலங்காநல்லூர்,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கேட்டுக்கடையில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து பாலபிஷேகம் செய்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியை தொழிலதிபர் செந்தில்குமார், சோழவந்தான் தொகுதி முக்குலத்தோர் நலசங்க தலைவர் சார்லஸ் தலைமையில், துணைத்தலைவர் சோனைமுத்து,செயலாளர் ஆதி முத்துக்குமார், பொருளாளர் குமரேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பால்குட ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மேளதாளம் சிலைக்கு மாலை அணிவித்து பால் ஊற்றி அபிசேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முக்குலத்தோர் நலச்சங்கம் சார்பில் கீழச்சின்னனம்பட்டி,
கோணப்பட்டி, மறவபட்டி, சத்திரவெள்ளாளபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஏற்பாடுகளை சோழவந்தான் தொகுதி முக்குலத்தோர் நல சங்கத்தினர் செய்திருந்தனர்.