தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,2 ம் வகுப்புகள், 3 முதல் 5 ம் வகுப்புகள் மற்றும் 6 முதல் 8ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக மாணவ மாணவிகளுக்கு வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இதில் ஓவியம் வரைதல், பாடல்கள் பாடுதல், வண்ணம் தீட்டுதல், வில்லுப்பாட்டு,கிராமிய நடனம், தனிநபர் நடிப்பு, பரதநாட்டியம் என பல்வேறு போட்டிகள் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மைய கருத்தினை கொண்டு நடைபெற்றன. நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு ஆர்வமுடன் பங்கேற்றனர். வட்டார அளவிலான அமைப்புக்குழுக்கள் முன்னிலையில் கலைத் திருவிழா போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் வட்டார வள மையப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.