திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வலங்கைமான் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா வழிகாட்டுதல்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டதாரி உதவி தலைமை ஆசிரியை வனிதா அனைவரையும் வரவேற்று பேசினார். வலங்கைமான் வட்ட சட்டப்பணிகள் குழுவின் வழக்கறிஞர்கள் தண்டாயுதபாணி,திருநாவுக்கரசு, சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். மேலும் சட்டப்படிகள் குழுவின் மூலம் எவ்வாறு சட்ட உதவிகளை பெறுவது என்றும் ஆலோசனை வழங்கினர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, சட்டப் பணிகள் குழுவின் உதவியுடன் பல மாணவர்களுக்கு உதவிகள் பெற்று தந்த அனுபவங்களை எடுத்துரைத்தார். இப்பள்ளி மாணவிகளும் தங்கள் பிரச்சனைகளுக்கு தயங்காது வட்ட சட்ட பணிகள்குழுவின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தினார். நிறைவாக இடைநிலை உதவி தலைமை ஆசிரியை மங்கலம் அனைவருக்கும் நன்றி கூறினார்.