மக்களும், நாடும் முன்னேற இயற்கையையும், இறைவனையும் தீப ஒளியேற்றி வழிபடுவோம், தீமை அகன்று நன்மை பெருகட்டும் தீபாவளித் திருநாள் தமிழர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்வழி காட்டி நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல ஒளி ஏற்படுத்தட்டும்.

தீபாவளி நாளை ஒட்டி மக்கள் புத்தாடை அணிவதும், இறைவனை வழிபடுவதும், பட்டாசுவெடிப்பதும், இனிப்புகள் பரிமாறுவதும், உதவிகள் செய்வதும் மகிழ்ச்சிக்குரியது.
கடந்த கால சிரமங்கள், துன்பங்கள், இயற்கைச் சீற்றங்கள் தொடராமல் இருக்க வரும்காலம் புதுப்பொலிவுடன் இருக்கும் வகையில் தீபாவளித் திருநாள் அமைய வேண்டும்.

தீய எண்ணங்கள் மறைய, நல்லெண்ணம் மேலோங்க தீபாவளி வழிகாட்டட்டும்.

சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும்
அனைவரும் ஒற்றுமை, அன்பு, நட்பு, உதவி ஆகியவற்றை கடைபிடித்து மாநிலங்களை மேம்படுத்தவும், நாட்டை பாதுகாக்கவும் துணை நிற்க வேண்டும்.சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தீபாவளியை ஒட்டிகடைபிடிக்க வேண்டிய விதிகளை கடைபிடிப்போம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவனமுடன் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கவேண்டும், அடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும், பட்டாசு
கடைகளிலும் பாதுகாப்புடன் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். தமிழர்கள் உள்ளிட்டநாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக தெரிவித்துக்கொள்வதாக தமது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *