நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று மும்பை விழித்தெழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் பேட்டி.
மும்பையிலிருந்து நெல்லைக்கு வழி கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி? அம்பை ,சேரன்மகாதேவி சிறப்பு ரயில்; நெல்லையை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி ஒப்புதல் பெற்றதற்காகவும்; பல்வேறு மும்பை தமிழ் ரயில் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கைக்காகவும்; நெல்லையில் இருந்து சென்னைக்கு தினமும் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை வைப்பதற்காக நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது மேலும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி
பாதுகாக்கவும்; பத்தமடையில் உள்ள மகளிர் பள்ளி அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்றித்தரகோரியும்; மகளிர் கல்லூரி அமைக்கவும்; சமுதாய நலக்கூடம்; பூங்கா அமைத்த தர கோரிக்கை வைக்கப்பட்டது.
மனு கொடுத்துட்டு போங்க செய்துதருவதாக உறுதியளித்தார்.
கோரிக்கையை உள்வாங்கிக்கொண்டு பதில் அளித்தார் அதாவது நெல்லை கோட்டதற்கான வரைபடங்கள் தயார் செய்யும் பணி நடந்துவருவதாகவும் மும்பை தமிழர்களின் கோரிக்கையை ஒவ்வொன்றாக பரிசீலித்து நிறைவேற்றித்தருவதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தாக தகவலை பகிர்ந்துக்கொண்டார் மற்றும் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் கலக்கும் பகுதியை பார்வையிட்டதாகவும் தடுக்க ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். மும்பைக்கு ஜனவரி மாதம் ஒரு நிகழ்வுக்காக வருவதாக தெரிவித்தார். மும்பைக்கு வாருங்கள் உங்களை வரவேற்கிறோம் என தெரிவித்து விடைபெற்றோம்.