மாநில அளவிலான 7வது வரிசை டேபிள் டென்னிஸ் போட்டிகள்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் விளையாட்டு கழகம் சார்பில், 7வது தரவரிசை மாநில டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நேற்று அனிதா பார்த்திபன் உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெ.டேவிட் டேனியல் துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் 11 வயதுகுட்பட்டவர்கள், 13, 15,17,19 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என 6 பிரிவுகளின் கீழ், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடைபெறுகிறது. சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் என மாநிலம் முழுவதிலுமிருந்து 1,300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
தொடக்க விழாவுக்கு வந்தவர்களை விளையாட்டு கழகத்தின் இணைச் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்வில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் மாநில பொருளாளர் பி.பி.பாஸ்கர், தஞ்சாவூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் கழக தலைவர் எம்.என்.முகமதுரபீக், துணைத் தலைவர்கள் எம்.எஸ்.ஆசீப் அலி, எஸ்.கே.முத்துச்செல்வன், வி.சிவகுமார், எஸ்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகள் வரும் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் ரேங்கிங் அடிப்படையில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தொடர்ந்து 10ம் தேதி மாலை நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் விளையாட்டு கழகத்தினர் செய்து வருகின்றனர்.