கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520,7636427520.
பல்லடம் அருகே காரணம் பேட்டையில் ஆறு வயது சிறுவன் மர்மமான முறையில் மரணம்….
கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையில் பரபரப்பு…..
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் கணேஷ் நேற்று மாலை காணாமல் போனதாக கூறப்படுகிறது
மேலும் இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர் மேலும் இந்நிலையில் அச்சிறுவன் காலை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் சிறுவன் கொலை செய்யப்பட்டு உயிர் இழந்தானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பல்லடம் அருகே ஆறு வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.