திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420
திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தாராபுரத்தில் கலைஞர் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது!
இரண்டு அமைச்சர்கள் இரண்டு எம்பிக்கள் பங்கேற்பு!.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தாராபுரம் கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் .என்.கயல்விழி செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற எம்பி இ கே பிரகாஷ், பொள்ளாச்சி நாடாளுமன்ற எம்பி ஈஸ்வரசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர்
நூலகத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து நூலகத்திற்குள் சென்று வைக்கப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் பார்வையிட்ட இரு அமைச்சர் மற்றும் இரண்டு எம்பிக்கள் மற்றும் திமுகவினர் மற்றும் இளைஞர் அணியினரோடு இணைந்து தங்கள் வருகையை பதிவேட்டில் பதிவு செய்ததோடு நீண்ட நேரம் அங்கிருந்த நூல்களை வாசித்து விட்டு புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்.நகரச் செயலாளர் முருகானந்தம் 28 வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர். மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் சத்யா பழனிக்குமார் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் எஸ் கார்த்திக். ஒன்றிய செயலாளர்கள் எஸ் வி செந்தில் குமார் சந்திரசேகர், பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..