வலங்கைமானில் மூன்று சிவன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம், ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயம்,ஸ்ரீ தையல் நாயகி அம்பாள் சமேதஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயம் ஆகிய மூன்று சிவன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம், ஸ்ரீ முருகப் பெருமான், ஸ்ரீ வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் கடந்த 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சீர்வரிசை எடுத்தல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் உபயதாரர் வலங்கைமான் செங்குந்தர் சமூகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர். ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் உபயதாரர் வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாஸ்டர் எஸ். ஜெயபால் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். ஸ்ரீ தையல்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் உபயதாரர் வலங்கைமான் ஆர். பி. அரசு ஏஜென்சி ஆர். விஜய ராகவன் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் நகர முக்கியஸ்தர்கள், பக்தர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளைஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் ஆய்வாளர் க. மும்மூர்த்தி, வலங்கைமான் செங்குந்தர் சமூகத்தினர்,

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளையினர், ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய அறங்காவலர் சென்னை மீனா ராம் டிரஸ்ட் ஆர். சிவராமகிருஷ்ணன், உபயதாரர்கள், ஸ்ரீ வைத்தீஸ்வரன் நற்பணி மன்றத்தினர் மற்றும் நகர வாசிகள், தெருவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *