மருத்துவ செலவிற்காக அடமானம் வைத்து பணம் வாங்கிய நிலத்தை போலி பத்திரம் செய்து விற்பனை செய்த நிதி நிருவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கபட்ட பெண் கோவை காவல் ஆனையரிடம் மனு.

கோவை கனுவாய் பகுதியை சேர்ந்தவர் பானுமதி (57), காலில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவ செலவிற்கு பணம் தேவைபட்டதால் தனக்கு பாத்தியபட்ட 65 செண்ட் நிலத்தை கோவை அடுத்த அறிவொளி நகர் பகுதியிலுள்ள மணி என்பவரது மகன் சன்முகம் என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.20 லட்சம் பல கட்டங்களாக கூகிள் பே மூலம் பெற்றுள்ளார். இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி பானுமதியை அனுகிய சன்முகம் கடனுக்கு ஈடாக அடமானம் வைத்த நிலத்தினை தனது பெயரிற்கு எழுதி கொடுக்குமாறு கேட்டுள்ளதோடு 17ம் தேதி அடமான பத்திரம் தயார் செய்து வந்ததோடு வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகம் அழைத்து சென்று அங்கு சாட்சி கையேழுத்திட தயாராக இருந்த இருவர் உதவியுடன் சன்முகம் தனது பெயரில் நிலத்தை மாற்றிகொண்டதோடு மேற்படி பானுமதிக்கு எந்த பணமும் அளிக்கவில்லை. மேலும் மாற்றிய அடமான ஆவணத்தை தன்னிடமே இருக்கட்டும் என சன்முகம் வைத்துகொண்டுள்ளார். இதனையடுத்து பானுமதி அடமானம் வைத்த இடத்தின் சர்வே எண்ணை கொண்டு வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்த போது தான் சன்முகம் தன்னிடம் இருந்து கடன் அடமான பத்திரம் எழுதாமல் பொது அதிகார பத்திர ஆவணத்தை எழுதி வாங்கியுள்ளார் என்ற விவரம் தெரியவந்ததோடு, பாத்திரத்தை போலியாக தனது பெயரில் மாற்றம் செய்ததோடு ரூ.4 கோடி மதிப்பிலுள்ள தனது நிலத்தை அதிமுகவை சேர்ந்த பிரமுகர்களுக்கு விற்பனை செய்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்த பானுமதி கடன் அடமானம் வைத்த தனது நிலத்தை போலி பத்திரம் செய்து விற்பனை செய்த சன்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தனக்கு சொந்தமான நிலத்தினை தனக்கு மீட்டு கொடுக்க வேண்டுமெனவும் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார். மேலும் தனது நிலம் தொடர்பாக கேட்டதற்கு சன்முகம் கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறியவர் தனக்கும் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும், தனக்கு பாத்தியபட்ட நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *