தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ரம்யா வழங்கினார்.
சீருடைகளை பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துலெட்சுமி செய்து இருந்தனர்.