தமிழகத்தில் முதல் முறையாக கோவை ரெசிடென்சி ஓட்டலில் ஆப்கான் உணவு அறிமுகம் – கோவை உணவு பிரியர்கள் மகிழ்ச்சி..!
கோவை உணவு பிரியர்களுக்கு – “ஆப்கான் கிரில் சிக்னேச்சர் உணவை
புதிதாக அறிமுகப்படுத்திய சமையல் கலைஞர்கள்..!
கோவை அவிநாசி சாலையில் உள்ள “தி ரெசிடென்சி டவர்” நட்சத்திர விடுதியில் “ஆப்கான் கிரில் சிக்னேச்சர்” புதிய உணவை அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர விடுதியின் முதன்மை மேலாளர்கள் – உணவகத்தின் செஃப் மற்றும் உணவு தயாரிக்கும் செப் ஆகியோர் இணைந்து வெளிநாட்டினற்களுக்கு
புதுவகை உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளனர்..
இது குறித்து ரெசிடென்சி ஓட்டல் ஏரியா டைரக்டர் ஆபரேஷன்ஸ் சார்லஸ் ஃபேபியன், நிர்வாக உதவி மேலாளர் சுஜித் குமார்,தலைமை சமையல் கலைஞர் முகம்மது ஷமீம்,ஆப்கன் கிரில் சமையல் கலை நிபுணர் அமித் கான்,ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்..
ஆப்கன் கிரில் உணவகத்தில் சாப்பிட வருபவர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் ஸ்விம்மிங் பூல் அருகே ,வானத்து நட்சத்திரங்களை ரசித்தபடி,உணவுகளை ருசிக்க அழகான சூழ்நிலைகளை அமைத்துள்ளதாகவும்,
ஆப்கான் கிரில் உணவகத்தில் பயன்படுத்தும் மசாலா வகைகள் டெல்லி மற்றும் லக்னோவில் இருந்து இறக்குமதி செய்து வருவதாக தெரிவித்தனர்..
குறிப்பாக ஆப்கன் கிரில் மெனு வகைகள் வேறு எங்கும் கிடைக்காத வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்து வருவதாக கூறினர்..
28″வகையான மூலப்பொருட்கள் சேர்த்து அதனை அதனை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப சுவையாக விநியோகம் செய்யப் போவதாகவும்
குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் ரசிக்கும் வகையில் உணவு தயாரித்து தமிழகத்தில் முதல் முறையாக ஆப்கான் கிரில் உணவகத்தை ரெசிடென்சி டவரில் அறிமுகம் செய்துள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்..
இந்த புதிய வகை ஆப்கான் உணவினால் – கோவை உணவு பிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் உணவை ருசிப்பதற்கு காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…