ஒரு புத்தொழில் நிறுவனத்திற்குத் தேவையான சேவைகளை அளித்திட இயங்கி வரும் அமைப்புகள் தான் இந்த ’புத்தாக்க வளர் மையங்கள்’ (Incubation Center).

ஒரு புதிய தொழிலை துவங்குவோர் அதனுடைய ஆரம்ப நிலையில் இருந்து, செயல் வடிவம் பெற்று, ஒரு வெற்றிகரமான தொழிலாக வளரும் வரை அந்த நிறுவனர்களோடு இருந்து தொழிலின் வெற்றிக்கு தோள் கொடுப்பவர்கள் தான் புத்தாக்க வளர் மையங்கள் எனும் இன்குபேஷன் சென்டர்..

கோவையில் இது புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் கொடிசியா அருகில் உள்ள ஜி.ஆர்.ஜி.வளாகத்தில் செயல்பட்டு வரும் ஜி.ஆர்.ஜி.நெக்ஸ்ட் ஜென் இன்கு3பேட்டர் தொடர்ந்து புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் சேவையை செய்து வருகின்றனர்..

இந்நிலையில் சுமார் 100 பேர் அமர்ந்து புத்தாக்க தொழில் குறித்த ஆய்வுகளை செய்து வரும் இந்த மையத்தில் தற்போது உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டினரும் கலந்து கொண்டு பயனடையும் வகையில் குறிப்பாக பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக புதிய விர்ச்சுவல் இன்குபேஷன் மையம் துவங்கப்பட்டுள்ளது..

இது குறித்து ஜி.ஆர்.ஜி.நெக்ஸ்ட் ஜென் இன்குபேட்டர் மையத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேத்தல் சோன்பால் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

புதிய தொழில் துவங்கும் முனைவோர்களுக்கு தேவையான சேவைகளை இங்கு வழங்கி வருவதாக கூறிய அவர், குறிப்பாக ஒரு இளம் தொடக்கநிலை ஸ்டார்ட்அப் நிறுவனருக்கு விற்பனை, சந்தைப்படுத்தல், தொழில்நுட்பம், தயாரிப்பு, சட்ட மற்றும் கணக்கு ஆதரவு உட்பட, தொடக்கப் பயணத்தின் பல்வேறு அம்சங்களைக் கணக்கிடுவதற்காக, முப்பதிற்கும் மேற்பட்ட தகவல்களை அளிக்க தனிப்பட்ட குழுவினர் வழிகாட்டிகளாக இருப்பதாக அவர் தெரிவித்தார்…

தற்போது பிரத்யேகமாக துவங்கப்பட்டுள்ள விர்ச்சுவல் இன்குபேஷன் திட்டம், இன்குபேட்டரின் 2 ஆம் கட்ட வளர்ச்சி உத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிப்பதாக கூறிய அவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப்களுக்கு விரிவான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த விர்ச்சுவல் மையம் துவங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்..

புதிய விஐபி திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு நிபுணத்துவ வழிகாட்டுதல், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், நிதி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஜி.ஆர்.ஜி.நெக்ஸ்ட் ஜென் இன்குபேஷன் மையத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் உடனிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *