உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாவில் ஜனநாயக ரீதியில் போராடிய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையை கண்டித்தும், படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நீதி வேண்டியும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி தலைவர் ஜே.ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. தொகுதி செயலாளர் எச்.முகமது ஜாபீர் வரவேற்புரையாற்றினார்.
ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மு.ஜமால்தீன், பொதுச்செயலாளர் குறிஞ்ச.பாஷா, துணைத்தலைவர் ஜம்பை.ரபீக், மாவட்ட செயலாளர் முனாப், எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆட்டோ அப்துல் ரகுமான், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல செயலாளர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம், தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானி தொகுதி துணைத் தலைவர் நிஹார் (எ) ஜன்னத்துல் பிர்தௌஸ், இணைச்செயலாளர்கள் அக்பர், இஸ்மாயில், ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் தளபதி கே.எஸ்.பசீர், துணைத் தலைவர் அப்துல் சலாம், இணைச்செயலாளர் ரசூல் மைதீன், பொறியாளர் அணியின் மாவட்ட தலைவர் முகமது ஸஃப்வான், வர்த்தகர் அணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதாம் (எ) மியாக்கான் SDTU தொழிற்சங்க ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஜா உள்ளிட்ட கட்சியின் தொகுதி வார்டு நிர்வாகிகள் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டு நீதி வேண்டி கோஷங்கள் எழுப்பினர். இறுதியாக பொருளாளர் தர்வேஸ் மைதீன் நன்றியுரையாற்றினார்.