கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆய்வில் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையத்தில் போதிய வசதிகள் , குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளதா என்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ,பணி நேரத்தில் பணியாளர்கள் உள்ளார்களா என்றும் மின்சாரம் கழிவறை வசதிகள் உள்ளதா என்றும், போதிய சுகாதார வசதிகள் உள்ளதா என்றும்,
மருத்துவமனையில் மருத்துவர்கள் சரியாக நோயாளர்களுக்கு மருத்துவம் அளிக்கிறார்களா எனவும் நோயாளிகளிடம் கேட்டு அறிந்து மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் முழுவதும் சுகாதாரப் பராமரிப்பு செய்ய வேண்டும் எனவும்
ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், மாமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன் , முருகன்,தலைமை மருத்துவ அலுவலர் கமுரூல் ஜமாலுதீன் , தலைமை நிலைய மருத்துவ அதிகாரி பிரபாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.