கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520,7639427520.
கோவை திருப்பூர் மாவட்டங்களில் சூல்ஜர் மற்றும் ஏர்ஜெட் தறி சங்கத்தினர் வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிப்பு…
பல்லடத்தில் நடைபெற்ற சிஸ்வா நிர்வாக குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர் பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிஸ்வா நிர்வாக குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 40,000 ஆட்டோலும் குல்ஜர் மற்றும் ஏர்செட் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் கட்டண உயர்வு மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளால் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மீட்டர் ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட கூலியில் இருந்து நான்கு ரூபாய் வரை கூலித்தொகை குறைக்கப்பட்டுள்ளதால் தறி பராமரிப்பு ஆட்கோழி போன்ற பிரச்சனைகளால் வாங்கிய கடனை கூட கட்ட முடியாமல் சரி உரிமையாளர்கள் தவிர்த்து வருகின்றனர் இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட அதே கூலித் தொகையை கொடுக்க வேண்டும் ஆட்டோலும் துறைக்கு தனி மின் கட்டண விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் மூலப்பொருள்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து உரிய தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மேலும் கூலி உயர்வு மின் கட்டண பிரச்சனை ஆகியவற்றிற்கு ஜனவரி ஒன்றாம் தேதிக்குள் அரசு தீர்வு காணாவிட்டால் ஜனவரி 15ஆம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சிஸ்வா நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் இதன் மூலமாக நேரடியாக 30 ஆயிரம் தரி உரிமையாளர்களும் மறைமுகமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.