எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது.இன் நிலையில் திருவெண்காட்டை அடுத்த சின்ன பெருந்தோட்டம் கிராமம் கடற்கரைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் மூழ்காத சம்பா சாகுபடி பயிர்கள் தற்போது மேற்கு பகுதியில் இருந்து வரும் அதிகப்படியான மழை நீரால் 300 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.மேலும் மழை தொடர்ந்தால் சம்பா சாகுபடி பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில், தற்போது ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்தாலும் ஆண்டு தோறும் இந்த பகுதியில் மழை நீர் தேங்கி அழுகுவதால் இரண்டு முறை விவசாயம் செய்ய நேரிடுவதாக விவசாயிகள் கூறினர்.
மேலும் இந்த பகுதியின் பிரதான வடிகாலான செல்வனாறு வலது கரையை பலப்படுத்தி கடல் நீர் உட்புகாமல் ஆற்றின் முகப்பு துவாரத்தில் கதவணை அமைத்து தரவும், பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.