சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் 10 கி.மீ. தூரத்திற்கு கடல்அரிப்பு- 1000கும் மேற்பட்ட சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டதால் கரை ஓரம் இருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது நேற்று மதியம் முதல் மழை ஓய்ந்து, ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் 3வது நாளாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், கடலோர கிராமங்களில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.

மேலும் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக கடும் உயரத்துடன் அலைகள் கிளம்பி கரையை தாக்கி வருகின்றன.

இதனால் திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரையிலான 10 கி.மீ. தூரத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டு 1000கும் மேற்பட்ட சவுக்கை மரங்கள் வேரோடு கீழே சாய்ந்துள்ளன. கடலோர பாதுகாப்பு அரணாக விளங்கிய சவுக்கு காடுகளில் இருந்து மரங்கள் வேரோடு சாய்ந்து வரும் நிலையில் அவற்றை பாதுகாக்க கருங்கல் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் வனத்துறை மூலம் சவுக்கு காடு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *