கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தமிழ் மண்ணில் காங்கிரஸ் கட்சியின் 11ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடைவீதியில் கொடியேற்று விழா மாவட்ட தலைவர் என்.கே. சேகர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் தெற்கு வட்டாரத் தலைவர் சேதுராமன் , மாவட்டத் தலைவர் சேகர் ஆகியூர் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு வட்டாரத் தலைவர் விவேக், மாவட்டத் துணைத் தலைவர் மாஸ்கோ, மாவட்ட மகளிர் அணி தலைவர் சுகன்யா , மாவட்ட இளைஞரணி, நகரத் தலைவர் பக்ருதீன் அலி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.