ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான தன்மான தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
அவர் பூரண குணமடைந்திட வேண்டி வியாழக்கிழமை மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஹஜ்ரத் சேக் அலாவுதீன் பா(து)ஷா அவ்லியா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை (துவா) தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை முதன்மை மாநிலத் துணைத் தலைவர் எம்.ஜவஹர் அலி தலைமையில் ஈரோடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம்.ஜூபைர் அகமது, ஆகியோர் முன்னிலையில் சிறப்பு (துவா) பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்களான கே.புனிதன்,அம்மன் மாதேஷ், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை துணைத்தலைவர் கே.என்.பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,ஈரோடு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஈ ஆர் எஸ் பிரகாஷ்,சேவா தள மாவட்ட தலைவர் எஸ்.முகமது யூசுப், ராஜாஜிபுரம் சிவா, வெற்றிச்செல்வன்,கராத்தே அப்துல் காதர் சூரம்பட்டி திமுகவைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு (துவா) பிரார்த்தனை செய்தனர்.