வலங்கைமான் எம். கே. நகரில் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் உள்ள எம். கே. நகரில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
அது சமயம் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன், திமுக ஒன்றிய பிரதிநிதி சிங்கு தெரு எஸ். ஆர். ராஜேஷ் , வார்டு செயலாளர் செல்வமணி, வலங்கைமான் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.