நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு துர்நாற்றம் அடிப்பதை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உணர வேண்டும். நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட பின் முன்னாள் அமைச்சர் இரா காமராஜ்.வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வந்தது


இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இரா. காமராஜ் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்புகலூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் பின்பு ஓடையில் தண்ணீர் அதிகமானதால் சாலை பெயர்ந்து உள்ளதையும், மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களையும் பார்வையிட்டு நலம் விசாரித்தார்

தொடர்ந்து நீலக்குடி செல்வபுரம், ஆணைகுப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டார்
தொடர்ந்து செங்கமேடு சலிப்பேரி மற்றும் பத்தினியாபுரம் பகுதியில் மேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்து பாதிக்கப்பட்ட தொகுப்பு வீட்டினை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் ஆறுதல் கூறினார்


அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் கடந்த மூன்று நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த கனமழையின் காரணமாக பல இடங்களில் இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது அனைத்து பகுதிகளிலும் மொத்தமாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. இதில் சம்பா இளம் பயிர்கள் மூழ்கி இருக்கின்றன


அதேபோல தாளடி நெற்பயிர்கள் மிகப்பெரிய அளவில் மூழ்கி இருக்கிறது. இதற்கு காரணமாக விவசாயிகள் கூறுவது எங்கு பார்த்தாலும் வடிகால் ஆறுகள் தூர்வார வில்லை எனவும் முக்கியமாக வடிகால் துர்வாரப்பட்டு இருந்தால் இந்த இரண்டு மூன்று நாட்கள் பெய்த மழையில் இவ்வளவு தண்ணீர் தேங்கி இருக்காது என விவசாயிகள் கூறுகின்றார்கள் உரிய காலத்தில் தூர்வார வேண்டும் என்பது ஒரு அரசின் கடமை சரியாக தூர் வாராமல் இருந்ததால்தான் திருவாரூர் மாவட்டம் இதேபோல பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது

பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உரிய கணக்கீடு செய்ய வேண்டும் இன்றைக்கும் புயல் கரையை கடக்கும் என்கிற அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது எனவே புயல் கரையை கடந்தால் இப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் கஜா புயல் போன்று போர்க்கால நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பது மக்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

எனவே உடனே இந்த அரசு மெத்தனமாக இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் மக்களை பாதுகாக்கிற பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு உரிய கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறினார்


மேலும் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிரிடப்பட்டிருக்கிறது கிட்டத்தட்ட இப்போதே ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கக்கூடிய நிலை இருக்கிறது இன்னும் மழை தொடருமானால் பாதிக்கு பாதி அளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்படும்

இன்றைய தமிழக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா 300 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார் நாங்கள் நேற்றைக்கு பார்த்த இடத்திலேயே முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி போன்ற பகுதியில் மட்டுமே ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருக்கும் அவரும் அந்தப் பகுதியில் சென்று இருக்கிறார் என அறிகிறேன் அந்தப் பகுதியில் மிகப்பெரிய அளவில் பயிர்கள் மூழ்கி இருக்கிறது பயிர்கள் எல்லாம் நாற்றம் அடித்து விட்டது நாற்றம் அடிக்கும் அளவிற்கு மூழ்கி இருக்கிறது என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உணர வேண்டும் என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *