தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் நகர் என்.ஜி.ஒ காலனி 110 கேவி துணை மின்நிலையத்தில் திருநெல்வேலி மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி ஆய்வு செய்தார்,
அவர் ஆய்வின் போது 110 கேவி புதிய சர்க்யூட் பிரேக்கரை ஒரே நாளில் நிறுவி இயக்கத்திற்கு கொண்டு வந்த மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொறியாளர் களுக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன் நகர் துணை மின்நிலையம் நகரின் மின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பொலிவு பொலிவு மற்றும் நவீன மாற்றங்களுடன் மாறுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் வடகிழக்கு பருவமழையின் போது எடுக்க வேண்டிய தேவையான முன்னேற்பாடுகள், தயார்நிலையில் தேவையான முன் களப்பணியாளர்கள், தளவாடப்பொருட்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவசர காலங்களில் பொதுமக்களிடமிருந்து வரும் தகவல்களை கேட்டு உடனுக்குடன் சரிசெய்ய கட்டுப்பாட்டு அறையாக துணை மின்நிலையத்தில் பணியாளர்கள் இருக்க வேண்டும் என சங்கரன்கோவில் கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் எடுத்துக் கூறினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகர் உதவி செயற் பொறியாளர் பூபேஸ்ராஜ்மோகன், இளநிலை பொறியாளர் துணை மின்நிலையம் பால் ராஜ், நகர் உதவி மின் பொறியாளர் கருப்பசாமி உடனிருந்தனர்.