திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கோடீஸ்வரன் இல்ல திருமண விழாவிற்காக காலை தஞ்சையில் இருந்து புறப்பட்டு வந்த கழகப் பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு வழிநடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குறிப்பாக வடுவூர் பகுதியில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.ஸ்ரீ ரங்கநாயிக ஸமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில் திருபுவனம் ஆலயம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது கழக நிர்வாகி ராஜா , எடமலையூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று மன்னார்குடியின் எல்லையான காளவாக்கரை பகுதியில் கழக நிர்வாகிகள் சுஜய், செல்வம் , சரவணன், இளவரசி இளையராஜா உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு. அளித்தனர். மேலும் பிளவர் ஷாட் மட்டும் பட்டாசு முழங்காக வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து மன்னார்குடி சோழா திருமண அரங்கில் K கோடீஸ்வரன் இல்ல திருமண விழாவில் மணமக்கள் K அபினேஷ், R.உத்ரா லெட்சுமி ஆகியோருக்கு திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து கழக பொதுச்செயலாளர் சசிகலா திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அட்சதை தூவி ஆசீர்வதித்தார். இதில் சின்னம்மாவின் சகோதரர் திவாகரன் உள்ளிட்ட மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்