தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சை மத்திய மாவட்டம், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் 11 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட தலைவர் DBSV கௌதம் விழாவிற் க்கு தலைமையேற்று, கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.
மாநில இணைச்செயலாளர்கள், ராம்மோகன், வடுவூர். கார்த்திகேயன். மண்டல இளைஞர் அணி தலைவர் திருச்செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொது செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர், கோவி.மோகன் வரவேற்புறையாற்றினார். மாநகரத் தலைவர் வெங்கட்ராமன், வட்டாரத் தலைவர் அன்பழகன் சிறப்புறை ஆற்றினர்கள். மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜெகதீஷ், மாவட்ட நிர்வாகிகள் உலகநாதன், சாம்பசிவம், மாநகர நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், காசிநாதன் ராமச்சந்திரன், மகளிர் அணி வளர்மதி, இளைஞர் அணி நிர்வாகிகள் அருண் பிரசாத், பாண்டியன், வாசுதேவன், அய்யப்பன், மருதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.