தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக கோவையைச் சேர்ந்த ஜெரி லூயிஸ் நியமனம்
சிறுபான்மை துறை தலைவர் இம்ரான் பிரதாப் கார்ஹி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சிறுபான்மை துறை மாநில தலைவர் முகமது ஆரிப் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்..
இதில் மாநில ஒருங்கிணைப்பாளராக கோவை ஆடிஸ் வீதியைச் சேர்ந்த ஜெரி லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்..
இவர் கடந்த 35 ஆண்டுகளாக காங்கிரஸ் பேரியக்கத்தில் மாணவரணி, இளைஞர் அணி, சிவாஜி ரசிகர் மன்றம், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல் பட்டுள்ளார் .
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜெரி லூயிஸ் கத்தோலிக்க ஆயர் தாமஸ் அக்வினாஸை சந்தித்து ஆசி பெற்றார்..
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M. N.கந்தசாமி,
ஐ என் டி யூ.சி. தொழிற்சங்க தலைவர் கோவை செல்வன், சோபனா செல்வன், பேரூர் திருமூர்த்தி, ஊடகத்துறை தேசிய ஒருங்கிணைப்பாளர் கோவை ஹரிஹரன், மாமன்ற கவுன்சிலர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் மற்றும் சார்பாக அமைப்பு தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்…