மாதவரத்தில் பேரிடர் கால மீட்பு பணிகள் உபகரணங்களை சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளர் பார்வையிட்டார்.
செங்குன்றம் செய்தியாளர்
சென்னையில் பெய்து வரும் பருவமழையைத் தொடர்ந்து,
கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பில், மழைக்கால பேரிடர் மற்றும் மீட்பு பணிகள் குறித்து
சென்னை வடக்கு மண்டல காவல் கூடுதல் ஆணையாளர் நரேந்திரநாயர் கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் தலைமையில் புழல் சரக உதவி ஆணையாளர் சகாதேவன் மற்றும் மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் பூபாலன் மற்றும் போலீசார்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதவரம் சாஸ்திரி நகரில் உள்ள தனியார் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள முகாமில் மீட்பு பணிக்கான உபகரணங்களையும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள பிரட் பிஸ்கட் ,பாய் ஆகியவற்றை பார்வையிட்டு மரம் அறுக்கும் இயந்திரத்தையும் மற்றும் டியூப் கயிறுகள் மண்வெட்டி கோடாரி மண் அள்ள பயன்படும் சவுல் மற்றும் உபகரணங்களை பார்வையிட்டும் பின்னர் மரம் அறுக்கும் ரம்பத்தை இயக்கச் சொல்லி அவைகள் செயல்பட தகுதியானவையா என்பது குறித்து பார்வையிட்டு அவர்களுக்கு எவ்வாறு பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கினார்.
இந்த பேரிடர் பாதுகாப்பு மையத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட ஐந்து பெண் காவலர்களும் பேரிடர் மீட்பு குழுவினர் எட்டு பேர்கள் தயார் நிலையில் உள்ளனர் .