தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டுகாவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பணியின் சார்பாக தேவிரஹள்ளிகிராமத்தில் தூய்மை பணியாளர்களுக்கு போர்வைகள் மற்றும் மரம் நடுதல் மற்றும் மரக்கன்று வழங்குதல் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு மற்றும் பேனா இனிப்பு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜய் ராஜசேகர் மற்றும் துணை அமைப்பாளர்கள் விஜய்ஆனந்த் சத்திய பாரதி தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் லக்ஷ்மன் தனிகைவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் குமரவேல் சமூக வலைதள பொறுப்பாளர் ரஞ்சித் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய மகளிர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஷீலா குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்