“இணைய வழி பயன்பாட்டில் கவனக் குறைவே பண இழப்பிற்கு காரணம் “இணைய வழி குற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் மாணவர்களுக்கு அறிவுரை!!
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில்,
வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
“மாணவர்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் இணைய வழி குற்றத்திலிருந்து தப்பிக்க முடியும்.1930 என்ற எண்ணிற்கு பாதிக்கப்பட்ட உடனே புகார் செய்ய வேண்டும்.இதனை உறவினர்கள் அனைவருக்கும் தெரிவியுங்கள் என்றார்,வேந்தர்.
துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் பேசுகையில், மாணவர்கள் இணைய வழி தொடர்புகளில் பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படக் கூறினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர் மாவட்ட கண்காணிப்பாளர் டி.கண்ணன் பேசுகையில்,”இருசக்கர வாகனப் பயணத்தில் ஹெல்மெட் அணிதல்,போதைப் பொருட்களை ஒழித்தல்,
சைபர் கிரைமில் ஏமாற்றாது, ஏமாறாது இருத்தல், ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.. மேலும் இணைய வழியில் கவனக்குறைவே பண இழப்பிற்கு காரணம்” என்றார் எஸ்.பி.
பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன்,சைபர்கிரைம்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.அசோகன் ,மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் என்.மீனாவரவேற்புரையும், நன்றியுரையும் வழங்கினார் 1000 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.