தஞ்சாவூர் வந்த ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகள், நம் நாட்டின் பல பகுதிகளுக்கு பழமை வாய்ந்த கார்களில் ‘கார்ரேலி’ செல்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், நவ- 29. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துகுமார் ஆகியோர் தஞ்சாவூர் சந்தனமாலை அணிவித்து வரவேற்று புதுச்சேரிக்கு வழி அனுப்பி வைத்தனர்.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பின்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் ஐரோப்பிய உட்பட நாடுகளில் இருந்து புருனோ என்பவர் தலைமையிலான வெளி நாட்டு சுற்றுலா பயணிகள், 45 பேர், 22 பழமையான கார்களில், நம் நாட்டின்பல பகுதிகளுக்கும் சுற்றுலா பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த, 14ல் கோவாவில் துவங்கிய பழமை வாய்ந்த கார் ரேலி, ஹூப்ளி, ஹாம்பி, சிக்மகளூரு, கூர்க், மைசூர் வழியாக, நேற்று நீலகிரி மாவட் டம் குன்னுார் வழியாக இன்று தஞ்சாவூர் வந்தடைந்தனர்.
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாபயணிகள், அவர்களின் பழமையான கார்களுடன் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்த ஆண்டு நம் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பயணத்தில், 1932ல் இருந்து 1970 வரையிலான பழமை வாய்ந்த, 'ஜாகுவார், மெர் சிடிஸ் பென்ஸ், போர்ஷ், பென்ட்லி எம்.ஜி., ஆல் விஸ், வால்வோ' உள்ளிட்ட கார்களில் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் தேசிய நெடுஞ் சாலைகளில் செல்லாமல் கிராமபுற சாலைகளில் வழியாக புதுவை சென்று வரும் 1-ம் தேதி சென்னையை அடைகின்றனர்.
சுற்றுலா ஹெல்கா பயணி பிரைட்ரிச்ஸ் கூறுகையில், “1932ல் தயா ரிக்கப்பட்ட இந்த ஆல்விஸ் காரை, 30 ஆண்டுகளாக ஓட்டி வருகிறேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் மட்டுமே இந்த கார் விற்பனை செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த மாடல் இருந்தது. அதன் பிறகு மாற்றப்பட்டுள்ளது, உலகம் முழுவதும், 12 முறை சுற்றி வந்துள்ளேன், இந்த கார் பல பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளது. எங்கள் பயணத்தில் இந்தியாவின் கிராமங்கள் மிகவும் அழகாக உள்ளது," என்று கூறினார்