புயல் காற்று,மழை, வெள்ளத்தால் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தும், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தும், வீடுகள் இடிந்தும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு பிரட், பால் வழங்கி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் K.சேதுசெல்வம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில்மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ப.முருகன், தொகுதி செயலாளர் R.தென்னரசன்,மாநிலக் குழு உறுப்பினர்கள் S.எழிலன், R செல்வம், தொகுதி பொருளாளர் P.தனஞ்செழியன், தொகுதிக் குழு உறுப்பினர்கள் M.ரவி, V.லோகு, S ஆரமுது, கிளைச் செயலாளர்கள், R.சண்முகம், R.வெங்கடேசன், துணைச் செயலாளர் ஜம்பு உட்பட பலரும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.