விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தளவாய்புரம் நாடார் உறவின் முறை தலைவர் எம். உதயசூரியன் தலைமையில் பள்ளிச் செயலர் ஏ. பாலாஜி வரவேற்றுப் பேசினார்.
கருத்தரங்கில் தளவாய்புரம் காவல் ஆய்வாளர் காசிராஜன் ராஜபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர்,செண்பகவல்லி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் வள்ளியம்மாள் (நெடுஞ்சாலை), நுகர்வோர் இயக்க மாநில பொதுச் செயலாளர் வீரணன், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம், மாநில துணைத்தலைவர் மாரியப்பன், ராஜபாளையம் தாலுகா தலைவர் பேச்சி முத்து உள்பட பலர் பேசினார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள், மற்றும் போக்குவரத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்க உரை ஆற்றினார்கள். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி. தனபாலன் நன்றி கூறினார். 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.