செய்தியாளர். ச. முருகவேலு
தலைமைசெய்தியாளர்
டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
புதுச்சேரி என் ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு தற்போது மானிய விலையில் பால் கறவை மாடு கொடுத்துள்ளார்கள். இது பத்திரிகைகளில் அரசு விளம்பர நிகழ்ச்சியில் வந்துள்ள செய்தியாகும். அரசு இதற்கு விழா எடுத்துள்ளது .
பால் உற்பத்தியை மாநிலத்தில் பெருக்க வேண்டும் என்பதற்காக பால் உற்பத்தியாளர் சங்கம் பல வருடமாக இந்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு போராட்டம் நடத்தியுள்ளது. இவற்றை காதில் கொள்ளாத என். ஆர் காங்கிரஸ் . பாஜக கூட்டணி அரசு கரவை மாடு வழங்காமல் வழங்கியதாக கோப்புகளில் காட்டி அரசு விழாக்களிலும் பத்திரிகைகளிலும் அதை கொடுத்து மாநில வருவாயில் அரசு மோசடி செய்துள்ளது.
மானிய தொகையை மட்டும் பால் உற்பத்தியாளர் என்ற பெயரில் என் .ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களுக்கு கொடுத்துள்ளனர்.
இது அப்பட்டமான ஊழல் மோசடியாகும். இதன் பேரில் மாநில கவர்னர் அவர்கள் ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டும். இந்த விசாரணை குழுவில் பால் உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையில் நானும். புதுச்சேரி விவசாய சங்க தலைவர் து. கீதநாதன் அவர்களும் மற்ற. விவசாய சங்க தலைவர்களும் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இக் குழு விசாரணை நடத்தி உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு வரும். மேலும் கால்நடை துறையின் மருத்துவர்கள் இந்த விண்ணப்ப படிவத்தில் கையொப்பம்இட வேண்டும் என்று கால்நடை டாக்டர்களை மிரட்டுகின்றார்கள்.
வற்புறுத்துகின்றார்கள். வேறு வழி இல்லாமல் அவர்களும் கையொப்பமிட்டுள்ளார்கள். மக்கள் வரிப்பணம் பல கோடிக்கணக்கில் விரையம் ஆகியுள்ளது.
இதன் மீது முழு விசாரணை அமைக்க வேண்டும். கவர்னர் உடனடியாக இதன் மீது தலையீடு செய்ய வேண்டும் என்று புதுச்சேரி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.