திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பணி புரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் கே. சங்கர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கதிரவன் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய மதிய உணவு திட்டம், மேலாண்மை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு 2024-2025 திட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பு அலுவலர், ஊட்டச்சத்து நிபுணர், யோகா பயிற்சியாளர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு உணவு தயாரித்தல் மற்றும் சுகாதாரம் பராமரித்தல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்தனர். உதவியாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.