நலவாரிய மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)
திரு.ஸ்ரீதர் பி.ஏ.,பி.எல்., அவர்கள் முன்னிலையில், இன்று 04.12.24 மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் வாரியத்தில் சேர்த்து,
பதிவு செய்வது தொடர்பாகவும்,நலவாரிய உறுப்பினர்களின் பதிவு , புதுப்பித்தல் திருமண உதவி,கல்வி சலுகைகள், ஓய்வூதியம், இயற்கை மற்றும் விபத்து நிதிகள், விரைவாக கிடைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு,2025 ஜனவரி மாதம் முதல் நகராட்சி, ஒன்றிய பகுதிகளில் பதிவு முகாம் நடத்திட ஆட்சியர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

கட்டுமான நல வாரியத்தில்,ஒரு டாக்டர் ஒரு செவிலியரோடு இயங்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை வாகனம் செயல்படாமல் மாவட்ட நிர்வாகத்திற்கோ, தொழிலாளர்களுக்கோ, தெரியாமல் கடந்த ஒருவருடமாக இருப்பது தொடர்பாக சிஐடியு சார்பில் கூட்டத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் கடைகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணையின்படி, குறைந்தபட்ச தினக்கூலி கிடைக்க உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., உள்ளிட்ட சலுகைகள் கிடைத்திட தொழிலாளர் நல அலுவலர்கள் ஆய்வுகள் நடத்திட வேண்டும் எனவும் சிஐடியு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது

முடிவில், மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் இது தொடர்பாக பரிசலீப்பதாகவும், நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடர்பாக, தினசரி நாளிதழ்களில் அறிக்கை மூலம் தொழிலாளர்களுக்கு தெரிவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *