நினைவு அஞ்சலி” தமிழக முன்னாள் முதல்வரும், திரைப்பட நடிகையுமான புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் தலைமையில் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் நடிகர்கள், நடிகைகள், அனைவரும் கலந்து கொண்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.