சூரியம்பாளையம் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த கும்பாபிஷேகத்தை காண அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தரகள் சாமி தரிசனம் செய்தனர்..
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ராமன் பாலக்காடு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உள்ளது. கோவில் புனரயைப்பு பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் இன்று கோவிலின் கும்பாபிஷேக விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது
முன்னதாக நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் இன்று காலை யாகசாலையில் வைத்து குண்டங்கள் நடத்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க நிறைவாக பூர்ணா வதி சமர்ப்பிக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி கலசத்தை எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுரத்தின் மீது வைக்கப்பட்ட விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது
கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷங்களை எழுப்பி கும்பாபிஷேகத்தை கண்டுகளிதினார் பின்னர் கருவறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. பின்னர் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது