சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் இணை செயலாளராக லாவண்யா தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி மாநிலம், உழவர்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தக்ககுட்டை பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இணைச் செயலாளர் லாவண்யா தலைமையில்
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 68 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவச் சிலைக்கு அமமுக இணை செயலாளர் லாவண்யா அலங்கரிக்கப்பட்ட திருவுருவைச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் எதிரே அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவட்சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யூசி ஆறுமுகம் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.