தேனி பங்களா மேட்டில் உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தலைவர் ஆர் வி ஷஜீவனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று அரசாணை வெளியீட்டுள்ளது. இதன்படி வணிக நிறுவனங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தமிழ் மொழியினை கையாள்வது மற்றும் நமது தாய் மொழியான நம் தமிழ் மொழியில் கையொப்பம் இடுதல் போன்றவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணி நகரின் இதய பகுதியான பங்களா மேடு பழைய பேருந்து நிலையம் வழியாக பெரியகுளம் ரோடு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வரை சென்று மீண்டும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆய்வு மாளிகையில் நிறைவு பெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் அரசு பணியாளர்கள் தமிழ் அமைப்புகள் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்
பேரணியில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கனிமொழியானது தனி மொழியானது தமிழே தாய்மொழியானது தமிழே அறிவிப்பு பலகை எல்லாம் அருந்தமிழ் சொல்லாக்குவோம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியாவறும் மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர் இதனை தொடர்ந்து உணவுப்பொருள் விளங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பங்களா மேட்டில் இருந்து தேனி கான்வென்ட் பள்ளி வரை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை இயந்தியவாறு பேரணியாக சென்றனர்
இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பெ.இளங்கோ மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி உதவியாளர் அர்ஜுனன் அரசு அலுவலர்கள் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவியர்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்