வெ .நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
திருச்சி மாவட்டம் துறையூரில் ஓலா எலக்ட்ரிக் நிறுவன ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.துறையூரில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் ஸ்ரீரங்கா காம்ப்ளக்ஸில் நேற்று முன்தினம் (டிசம்பர் 26)ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஷோரூமை தொழிலதிபர் “ரெங்கா ரமேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓலா நிறுவன மேலாளர் சரத்குமார் முன்னிலை வைகித்தார். ஓலா எலக்ட்ரிக் வாகனத்தின் முதல் விற்பனையை லக்ஷயா ரமேஷ் தொடங்கி வைத்தார்.இதில் பொறியாளர் குமார், பி கிருஷ்ணகுமார், சிவ கிருஷ்ணா கருணாகரன், டயர் சரவணன்,டைல்ஸ் திருமுகம், போர்வெல் விஜயன், பேட்டரி துரைசாமி, கலை செல்வி குணசேகரன், புல்லட் ராஜ்,செல்லிபாளையம் ஊராட்சித் தலைவர் அரவிந்த், ரோட்டரி சங்கம் சந்திரசேகர் ஆசிரியர்,கோவிந்தராஜ் ஆசிரியர், என் எஸ் கே செல்வம், இ பி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.