கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்ற பிரதர்ஷயான் எனும் அறிவியல் கண்காட்சியில் மாணவ,மாணவிகள் கணிதம்,அறிவியல்,புவியியல் என பல்வேறு துறை சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்…

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் பிரதர்ஷயான் எனும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது..

ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கென நடைபெற்ற இதில், இதில், மாணவர்களின் அறிவியல், கணிதம், புவியியல் உள்ளிட்ட படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக கண்காட்சியின் துவக்க விழா சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை தாங்கினார் சுகுணா பிப் பள்ளியின் தாளாளர் சுகுணா முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கடற்படையின் சி.ஐ.எஸ்.ஆர்.இயக்குனர் கமாடர் சோமசுந்தரம்,
சிட்ரா இயக்குனர் பிரகாஷ் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்..

விழாவில் சாந்தினி அனீஸ் குமார்,சுகுணா பிப் பள்ளியின் சீனியர் முதல்வர் மார்ட்டின்,மற்றும் முதல்வர் பூவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்..

கண்காட்சியில் ,பள்ளி மாணவர்கள், தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி செய்முறை விளக்கம் அளித்தனர்.

தற்போதைய விஞ்ஞான உலகத்தில் அறிவியலின் முக்கியத்துவம் எவ்வாறு உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவ, மாணவிகள் தாங்கள் கண்டுபிடித்த ஏராளமான படைப்புகளை காட்சிகளாக வைத்து அதற்கு செயல்முறை விளக்கம் தந்தனர்.

குறிப்பாக அடுத்த தலைமுறை தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவு,தகவல் தொடர்பு, ரோபோட்டிக் தொழில் நுட்பங்கள் அடங்கிய விவசாயம்,மருத்துவம், மற்றும் நீர் மேலாண்மை உள்ளிட்ட படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவனம் ஈர்த்தன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *