கோவை டிரினிட்டி பள்ளியில் நடைபெற்ற டெக்னோ எக்ஸ்போ’வில் மாணவர்கள் தயார்படுத்திருந்த ரோபோடிக்ஸ் மற்றும் கணினி கண்காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி பள்ளியில் டெக்னோ எக்ஸ்போ என்னும் ரோபோடிக்ஸ் மற்றும் கணினி கண்காட்சி நடைபெற்றது.இக்கண்காட்சியை பள்ளி தாளாளர் அருட்தந்தை. மார்டின் மற்றும் முதல்வர் டாக்டர் தனலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் வாழ்த்தி பேசினர்.
இக்கண்காட்சியில் ரோபோடிக்ஸ் மாடல்காளான வீட்டு ஆட்டோமேஷன், தானியங்கி தெருவிளக்கு, வாக்குப்பதிவு இயந்திரம், தடைகளைத் தவிர்க்கும் கருவி, ஸ்மார்ட் டேப், தெளிப்பான் கொண்ட தானியங்கி, தானியங்கி கதவு மணி, கூடைப்பந்து கவுண்டர், உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டது.நவீன உலகில் ரோபோடிக்ஸின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளி பருவத்திலேயே ரோபோடிக்ஸ் மூலம் அன்றாட வாழ்க்கையை எளிதாக மாற்றி அமைக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இக்கண்காட்சியின் முக்கிய அம்சமாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் “ட்ரோன்” ஆப்ரேட் செய்து, அதன் அடிப்பட பற்றி மாணவர்கள் எடுத்துரைத்தனர்.அதே போல ஹார்டுவேர்,சாப்ட்வேர், நெட்வொர்க் டெக்னாலஜி மாடல்ஸ் உள்ளிட்டவை காட்சி படுத்தி விரிவுரை ஆற்றினர்.பெற்றோர்கள் ஆசிரியர்கள் இதனை பார்த்து மாணவர்களை பாராட்டினர்.