சென்னை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் திடலில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை சங்கமம் 2025 – நம்ம ஊரு திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி உடனிருந்தனர்.
இந்த விழாவில், நிதி துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு முதன்மை செயலாளர் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை டாக்டர்.சந்திரமோகன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.