திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சரவணன் தலைமையில், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலையில் புகையில்லா பொங்கல் 2025 விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன், நகர திமுக அவைத் தலைவர் சோம மாணிக்க வாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள்,தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு புகையில்லா பொங்கல் விட்டு வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் விழாவிற்காக பாத்திரம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.