தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வியாழ வட்டத்தின் 58 ஆவது சிறப்பு நிகழ்ச்சி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தமிழகம் கேரளாவை இணைக்கும் இயற்கையில் எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொஞ்சம் முந்தல் சாலையில் அமைந்துள்ள கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவு சார்பில் நடைபெற்ற வியாழ வட்டத்தின் 58 வது சிறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்
கல்லூரி செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு தலைவரும் கம்பம் நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் சோ. பஞ்சு ராஜா பங்கேற்று மாணவ மாணவிகளிடையே பேசும் போது தேனி மாவட்ட வரலாற்றுச் சுவடுகள் மக்களால் அறியப்படாமலே உள்ளது
வருங்கால ஆய்வாளர்களாகிய கல்லூரி மாணவ மாணவிகள் தான் தேனி மாவட்ட வரலாற்றினையும் நம் மாவட்டத்தின் சிறப்புகளையும் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு வரலாற்றுச் சுவடுகள் பற்றி புரியுமாறு விளக்கிப் பேசினார். இந்த நிகழ்ச்சியால் கல்லூரியின் மாணவ மாணவிகள் வரலாற்றுச் சுவடுகள் பற்றி அறிந்து பயன்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தமிழ் துறை சுயநிதிப்பிரிவு பேராசிரியர்கள் முனைவர் பால்பாண்டி பேராசிரியர் மாசிலா மணி முனைவர் அங்கயற்கண்ணி பேராசிரியர்கள் தனலட்சுமி ரேணுகாதேவி மற்றும் கல்லூரி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர் நிகழ்ச்சியில் நிறைவில் கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா நன்றி கூறினார்