கே தாமோதரன் செல்:9842427520.
திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி….
திருப்பூர் அருகே பல்லாகவுண்டம்பாளையத்தில் இன்று காலை தனியார் பேருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஈரோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது ஊத்துக்குளி அருகே உள்ள பல்லாக் கவுண்டம்பாளையம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்
இதில் கல்லூரி மாணவர்கள் இருவர் மற்றும் பயணிகள் இருவர் மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர் இதுகுறித்து ஊத்துக்குளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.