பிரபு தாராபுரம் செய்தியாளர்.
செல்:9715328420
நாய்கள் கடித்து 30- ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு ஆடுகளின் இறந்த உடல்களுடன் விவசாயிகள் மூலனூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம்!..
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கருப்பண்ணன் வலசு ஊராட்சி பட்டத்து பாளையம் வேலுச்சாமி வெள்ளியங்காடு தோட்டத்தை சேர்ந்த விவசாயி கங்குசாமி-(வயது75) தனது தோட்டத்தில், 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று மாலை வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். இன்று காலை பட்டிக்கு சென்று பார்த்த-போது, 25 ஆடுகள், 5 குட்டிகள் இறந்து கிடந்தன மூலனூர் வருவாய் ஆய்வாளர், கால்நடை மருத்து-வர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதித்தார். உயிருக்கு போரா-டிய இரண்டு ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இறந்த ஆடுகளின் மதிப்பு, 2 லட்சம் ரூபாய் இருக்கும்.வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலியானதை கண்டித்து,
மூலனூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள தாராபுரம்-கரூர் மெயின் சாலையில் காவல் நிலையம் முன்பு, 100-க்கும் விவசாயிகள்,இறந்த ஆடுகளுடன் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூலனூர் பேரூராட்சி மற்றும் கருப்பன் வலசு ஊராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். உணவக இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும். தெரு-நாய்களால் பலியாகும் கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
தாராபுரம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இருப்பினும் இறந்த ஆடுகளுக்கு 2,லட்சம் இழப்பீடு உடனடியாக வழங்குமாறும் மேலும் இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தாராபுரம் கரூர் சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது மூலனூர் பகுதியில் தினமும், தெருநாய்களால் ஆடுகள் பலியாவது தொடர்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.