செங்குன்றம் செய்தியாளர்
சென்னை அடுத்த புழலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ திருமூலநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் அறநிலையத்துறை சார்பில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து இந்த கோவிலில் அன்னதானத் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , பக்தர்களுக்கு வடை, பாயாசத்துடன் கூடிய அறுசுவை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஆலயத்தில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .முன்னதாக திருக்கோவிலின் சார்பாக அமைச்சர் சேகர்பாபுவிற்கு கும்ப மரியாதை செலுத்தி வரவேற்று புரோகிதர்கள் தீப ஆராதனை காண்பித்து சுவாமி தரிசனம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறநிலையத்துறை அதிகாரிகள் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் பகுதி செயலாளர் புழல் நாராயணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.