தஞ்சாவூர்- திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமையற்கலைஞருக்கு இடது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டபிறகு இருமுறை அறுவைசிகிச்சைகள் செய்த பின்பும் நடமாட்டமின்றி நான்கு ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த அவரை மீனாட்சி மருத்துவமனை எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் மீண்டும் நடமாடச் செய்திருக்கின்றனர்.

      சமையற்கலைஞர் குமார்-க்கு 2018-ம் ஆண்டில் பணிபுரியும் இடத்தில் உயரத்திலிருந்து கீழே விழுந்தார் பிறகு அவரது இடது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் செய்து கொண்ட போதிலும் அவரது நிலைமையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு ஆண்டு நடமாட்டமின்றி கடுமையான வலியுடன் அவதிப்பட்ட அவர் வேறொரு மருத்துவமனையில் இரண்டாவது முறையாக தொடை எலும்பு முறிவை சரிசெய்ய உட்பதிய அறுவைசிகிச்சையை செய்து கொண்டிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக இந்த அறுவைசிகிச்சையிலும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் அவரது வலியும், துயரமும் மனச்சோர்வு அதிகரித்து அவரை முடக்கிப் போட்ட பிறகு எப்படியாவது குணமடைய வேண்டுமென்று மனஉறுதியுடன் குமார் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர்.ரவிச்சந்திரன் இந்த வெற்றிகர அறுவைசிகிச்சை குறித்து கூறியதாவது: “திரும்பச் செய்யும் (ரீடூ) தொடை எலும்பு அறுவைசிகிச்சை என்பது உண்மையிலேயே அதிக சிக்கலான எலும்பு முறிவு நீக்கல் செயல்முறையாகும். எலும்பு இணையாமை அல்லது உட்பதியம் செயல்படத் தவறுவது போன்ற சிக்கல்களின் காரணமாக தொடக்க அறுவைசிகிச்சைகள் தோல்வியுறும் போது பெரும்பாலும் இவை மேற்கொள்ளப்படுகின்றன.

குறைபாட்டை சரிசெய்யும் இத்தகைய அறுவைசிகிச்சைகளின் வெற்றிக்கு அறுவைசிகிச்சை நிபுணத்துவம் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் அறுவைசிகிச்சைக்கு பிறகு துல்லியமான பராமரிப்பு மற்றும் பிசியோதெரபி ஆகியவை கண்டிப்பாக தேவைப்படும்.

எலும்பியல், இதயவியல், மயக்க மருந்தியல், இயன்முறை சிகிச்சை உட்பட துறைகளை சேர்ந்த சிறப்பு நிபுணர்களின் ஒத்துழைப்பின் வழியாகவே இந்த நோயாளிக்கான சிகிச்சையில் பல்வேறு சிக்கல்களையும் எங்களால் வெற்றிகரமாக கையாள முடிந்தது.

இதய சிக்கல்கள் வரும் இடர்வாய்ப்பும் மற்றும் நோயாளியின் அளவுக்கதிகமான எடையும் சவால்களாக நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எமது மருத்துவமனையின் நவீன கட்டமைப்பு வசதிகளும் மற்றும் எமது மருத்துவர்கள் குழுவின் நிகரற்ற நிபுணத்துவமும், இந்த சவால்களை சமாளித்து வெற்றிகாண மிக முக்கியமான அம்சங்களாக இருந்தன.

நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சை பலன்களை உறுதி செய்வதற்கு நவீன மருத்துவத்தின் சிறப்பு அம்சங்களை சரியாக பயன்படுத்துவதில் எமது அர்ப்பணிப்பை இந்த வெற்றிகர நிகழ்வு நேர்த்தியாக முன்னிலைப்படுத்துகிறது”.

எலும்பியல் துறையின் தலைவரும், முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணருமான மருத்துவர்.பார்த்திபன் பேசுகையில், “சேதமடைந்த எலும்பை சரிசெய்ய அல்லது அகற்றுவதற்கு எலும்புத்திசு மறுபதியம் செய்யப்படுகிற ஒரு அறுவைசிகிச்சை செயல்முறையான எலும்பு ஒட்டுமுறையை (கிராஃப்டிங்) நாங்கள் மேற்கொண்டோம். இந்த நோயாளியின் உடலில் இருந்தே இந்த ஒட்டு எடுக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக அதே தொடை எலும்பில் அறுவைசிகிச்சை செய்வது என்பது கணிசமான சவால்கள் நிறைந்ததாக இருந்தது. அதுவும் குறிப்பாக நோயாளியின் உடல் எடை 100 கிலோவிற்கும் அதிகமாக இருந்தது. தொடையில் அறுவைசிகிச்சை செய்யும் இடத்தை அணுகுவதற்கு இந்த கூடுதல் எடை பெரிய சவாலை உருவாக்கியிருந்தது. அத்துடன் இதய பிரச்சனைகளுக்கான சாத்தியமும், கூடுதல் கவலையளிக்கும் அம்சமாக இருந்தது.

மேலும் அறுவைசிகிச்சையின் போது கணிசமான இரத்த இழப்பு இருந்ததால் இரத்தமேற்றலும் அவசியமாக இருந்தது. இருப்பினும், கவனமான திட்டமிடல் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்களது ஒத்துழைப்பு செயல்பாட்டின் வழியாக இந்நோயாளிக்கான சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து எதிர்பார்த்த நடமாட்டத் திறனை அவருக்கு மீண்டும் வழங்கியிருக்கிறது. மீண்டும் பணிக்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகுத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியும். பெருமிதமும் கொள்கிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *