திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் :

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வேண்டுகோள் பட்ஜெட்டில் இம்முறை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் காத்துள்ளனர்:

தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வியில் 3700 பேர், ஓவியத்தில் 3700, கணினி 2 ஆயிரம் பேர், தையல் 1700 பேர், இசை 300 பேர், தோட்டக்கலை 20 பேர், கட்டிக்கலை 60 பேர், வாழ்வியல்திறன் 200 பேர் என மொத்தம் 12 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்:

2011-2012 ஆம் கல்வியாண்டில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்:

கடந்த 13 ஆண்டுகளில் 5 ஆயிரம் பேர் பணியிடம் காலியாக உள்ளது 14 ஆண்டு தற்காலிகப் பணியை, நிரந்தரப் படுத்த வேண்டும் ரூபாய் 12,500/- தொகுப்பூதியத்தை கைவிட்டு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம் நேரில் பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் அளித்ததை நிறைவேற்ற வேண்டும் :

பத்து ஆண்டுக்கு மேல் தற்காலிக பணி செய்தால் நிரந்தரம் என்ற 153 வது வாக்குறுதியும் நிறைவேற்ற வேண்டும் :


S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
Cell : 9487257203

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *